search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் மறியல் போராட்டம்"

    • ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

    மன்னார்குடி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இளஞ்சேரன் தலைமையில் வழக்கறிஞர்கள் மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    தகவல்அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின்னர், சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசாரின் பாதுகாப்பையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் சென்றவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் காரணமாக ரெயில் புறப்படுவதில் 1 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட தலைநகராக சிவகங்கை இருந்து வருகிறது. இதன் வழியாக பல்வேறு ரெயில்கள் சிவகங்கை வழியாக சென்றபோதிலும் சிவகங்கை நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் சிவகங்கையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பொதுமக்கள் ரெயில் வசதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சிவகங்கை மக்கள் நீண்ட காலமாக முன் வைத்து வருகின்றனர்.

    இருப்பினும் ரெயில்வே நிர்வாகம் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், கடையடைப்பு நடத்துவது என வணிகர்கள், அனைத்து கட்சியினர் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று (23-ந்தேதி) ரெயில் மறியல், கடையடைப்பு நடத்தப்படும் என அனைத்து அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கம், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து அறிவித்தனர்.

    இதையடுத்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோட்டாட்சியர் சுகிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் உள்பட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இருப்பினும் இந்த கூட்டத்தில் ரெயில்வே திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கப்படாததால் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று அனைத்து கட்சியினர், வணிகர்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதன் காரணமாக சிவகங்கை நகர் பகுதியில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய சாலைகள், தெருக்கள், பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதனிடையே ரெயில்வே திட்டங்களை செயல்படுத்தக்கோரி இன்று காலை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் மற்றும் அனைத்து கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    போலீசாரின் பாதுகாப்பையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் சென்ற அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த ரெயில் சிவகங்கை ரெயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது.

    போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

    போராட்டம் காரணமாக ரெயில் புறப்படுவதில் 1 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கடையடைப்பு, மறியலையொட்டி நகர்ப்பகுதி முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போரா–ட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
    • ரெயில் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து மாணவ, மாணவிகள் போ–ராட்டத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.

    கோவை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று இந்திய மாணவர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் போ–ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் 40க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்தின் பின்புற வழியாக ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை- நாகர்கோவில் ரெயில் முன்பாக மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து மாணவ, மாணவிகள் போ–ராட்டத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்த ரெயில்வே போலீசாரும், கோவை மாநகர போலீசாரும் போராட்ட–த்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய முயன்றனர்.

    ஆனால் மாணவர்கள் கைது நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கவே போரா–ட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது அவர்களுக்கிடையே இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    ரெயில் நிலைய வளாகத்தில் நடை–பாதையில் முழக்கங்கள் எழுப்பியபடி வந்த மாணவர்கள் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் முயற்சியே இந்த திட்டம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையம் முன்பு திரண்ட அவர்கள் மத்திய அரசிற்கு எதிராகவும், அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபடி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினா்.

    அப்போது போரா–ட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், இந்திய மாணவர் சங்கத்தினரும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்கள் காரணமாக கோவை ரெயில் நிலைய வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். #Gujjar #Protest #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்-மந்திரி அசோக் கெலாட் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை தொடர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் நேற்று 2-வது நாளாக மாநிலம் முழுவதும் ரெயில் மறியல், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ரெயில் மறியல், தர்ணா போன்ற போராட்டங்களால் மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.



    டெல்லி-மும்பை, டெல்லி-ஜெய்ப்பூர் ரெயில் பாதைகளிலும் போராட்டம் நடந்ததால் அந்த வழியாக செல்லும் 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    போராட்டம் குறித்து மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மறியலை கைவிடவேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் ரெயில் நிலையங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், போராட்டக்காரர்களின் இடஒதுக்கீடு பிரச்சினை பற்றி பிரதமரிடம் எடுத்துச்செல்வேன்’ என்றும் கூறினார்.

    போராட்ட குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்கு நல்ல முதல்வரும், நல்ல பிரதமரும் கிடைத்து உள்ளார்கள். பிரதமரின் கவனத்துக்கு எங்கள் கோரிக்கையை கொண்டுசெல்லவே போராடுகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ள நிலையில் நாங்கள் 5 சதவீத இடஒதுக்கீடு தான் கேட்கிறோம்’ என்றார். 
    கேரளாவில் இன்று 2-வது நாளாக ரெயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. #BharatBandh
    திருவனந்தபுரம்:

    நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு வரை நீடிக்கிறது.

    கேரளாவிலும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோ, டாக்சி, வேன்களும் ஓடவில்லை. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

    இதனால் ரெயில்களை பொதுமக்கள் நாடிச் சென்றனர். ஆனால் ரெயில்களையும் மறித்து போராட்டம் நடைபெற்றதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் தாமதமாகவே புறப்பட்டுச் செல்ல முடிந்தது. இந்த போராட்டம் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது.

    இன்று 2-வது நாளாக கேரளாவில் ரெயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். காலை 6 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடந்ததால் அந்த ரெயில் புறப்பட முடியாத சூழ்நிலை உருவானது. உடனடியாக ரெயில்வே போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு தாமதமாக ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    இதேபோல கொச்சி, கொல்லத்திலும் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.



    இன்றும் கேரள அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் பாதுகாப்பாக டெப்போக்களில் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் சபரிமலைக்கு சென்று வந்தன.

    திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்த நோயாளிகள் பலர் பஸ், ஆட்டோக்கள் இயங்காததால் சிரமத்திற்கு ஆளானார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தங்களது ஜீப், வேன்களில் அவர்களை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல உதவினார்கள்.

    வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  #BharatBandh



    1953-ம் ஆண்டு ரெயில் மறியல் போராட்டத்தில், கருணாநிதியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதானவருக்கு முக ஸ்டாலின் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். #Karunanidhi #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவுக்காக திருச்சி சென்றபோது, 1953-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கல்லக்குடி பெயர் மாற்றம் கோரி நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில், கருணாநிதியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதான பூவாளூரை சேர்ந்த செபஸ்தியன் என்ற ராசுவின் ஏழ்மை நிலைமை அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.



    இதைத்தொடர்ந்து அவரை அழைத்த மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #MKStalin
    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோடு ரெயில் நிலையத்தில் படுத்து ரெயிலை மறித்த பெண்கள் உள்பட 350 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    மார்க்கம்யூனிஸ்டு சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க அவசர சட்டம் இயற்றி அதை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.

    வன்கொடுமையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது.

    கம்யூனிஸ்டு கட்சியினருடன் தலித் அமைப்புகளும் சேர்ந்து இந்த மறியலில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் காளைமாடு சிலை அருகே இவர்கள் குவிந்தனர்.

    மாநகர செயலாளர் ரகுராமன், செயற்குழு உறுப்பினர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகட்சி அமைப்பு செயலாளர் விநாயக மூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மாநகர செயலாளர் அம்ஜத்கான், ஜாபர் அலி, பைசல் அகமது.

    தமிழ்புலிகள் மாநில பொது செயலாளர் இளவேனில் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கோபால் உள்பட 75 பெண்கள் உள்பட 350 பேர் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை முழங்கியபடி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

    ரெயில் நிலையம் முன் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முடியாத வண்ணம் பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜ்குமார், எட்டியப்பன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் இருந்தனர்.

    ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் பேரி கார்டை தள்ளிவிட்டு ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர்.

    3-வது பிளாட் பார்முக்கு சென்ற அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த கோவை- ஈரோடு பயணிகள் ரெயில் முன் என்ஜினில் அமர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் பலர் தண்டவாளத்திலும் ரெயிலை மறித்து அமர்ந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 350 பேரும் கைது செய்யப்பட்டனர். #tamilnews
    ×